ADDED : ஜூலை 25, 2025 11:21 PM

ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களிடம் கைரேகை பெறப்படுகிறது. பல்லடம் வட்டார ரேஷன் கடைகளில், கைரேகை விழுவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், பொருட்கள் வழங்க தாமதமாகிறது. பொதுவாக, வயதானவர்களுக்கு மட்டுமே கைரேகை விழுவதில் சிக்கல் ஏற்படும். சமீப நாட்களாக, இளைய வயதுள்ளவர்களுக்கும் கைரேகை விழுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், வேறு வழியின்றி, கருவிழியை ஸ்கேன் செய்கின்றனர். அதிலும், நீண்ட நேரம் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், பொருட்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, கைரேகை எளிதில் பதியும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
பி.எம்.எஸ்., ஆண்டு விழா
பாரதிய மஸ்துார் சங்கத்தின் (பி.எம்.எஸ்.,) 71வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஸ்தாபனர் தின விழா அனுப்பர்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன், தலைமை வகித்தார். செயலாளர் மாதவன், முன்னிலை வகித்தார். செயல் தலைவர் செந்தில் வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன், பனியன் சங்க செயலாளர் விக்னேஸ்வரன், கட்டுமான சங்க செயலாளர் சண்முகம், போக்குவரத்து தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம், உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிர்வாகிகள் பதவியேற்பு
தெற்கு இன்னர்வீல் சங்கத்தினர், 28வது பதவியேற்பு விழா, திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நேற்று நடைபெற்றது. புதிய தலைவியாக ஸ்ரீராஜலட்சுமி பதவியேற்றார். துணை தலைவி பரமேஸ்வரி பழனிசாமி, செயலாளர் அகிலாசதுர்வேதி, பொருளாளர் நித்யா தங்கவேல், ஐ.எஸ்.ஓ., ஜமுனா பாஸ்கர், தொகுப்பாளர் கீர்த்தி சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்னர்வீல் மாவட்டம் எண்: 320ன் முன்னாள் இயக்குனர் சரஸ்வதி வாழ்த்தி பேசினார். கல்லுாரி மாணவியர் மூன்று பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.