/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால்துறைக்கு 'டெலிவரி பாய்ன்ட்' கட்டுமான பணி 'ஜரூர்'
/
தபால்துறைக்கு 'டெலிவரி பாய்ன்ட்' கட்டுமான பணி 'ஜரூர்'
தபால்துறைக்கு 'டெலிவரி பாய்ன்ட்' கட்டுமான பணி 'ஜரூர்'
தபால்துறைக்கு 'டெலிவரி பாய்ன்ட்' கட்டுமான பணி 'ஜரூர்'
ADDED : ஜூன் 09, 2025 11:44 PM

திருப்பூர்; திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்துக்கு, 'டெலிவரி பாய்ன்ட்' ஆபீஸ் கட்டும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் தபால் அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், இடநெருக்கடி அதிகம். சமீபத்தில் பாஸ்போர்ட் கேந்திரா மையம் இங்கு திறக்கப்பட்டது; தினசரி ஆதார் சேவைகளுக்கு, 50க்கும் அதிகமானோர் வருகின்றனர். புதிய கணக்கு துவங்க, பணம் எடுக்க மற்றும் செலுத்த, தபால் செயல்பாடு மற்றும் நடவடிக்கை குறித்த விபரம் அறிய, நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். இதனால், தபால் அலுவலகம் காலை முதல் மாலை வரை 'பிஸி'யாக உள்ளது. மாநிலம் முழுதும் இருந்தும் பார்சல், தபால் வந்து குவிவதால், நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை தபால் அலுவலகத்துக்கான தபால், பார்சல்களை வேறு இடத்தில் 'புக்கிங்' செய்ய, அங்கே இருந்தே அனைத்து தபால் நிலையங்களுக்குமான 'பார்சல்' அனுப்ப ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக 'டெலிவரி பாய்ன்ட்' அலுவலகம், காலேஜ் ரோடு, சவுடாம்பிகா திருமண மண்டபம் அருகே கட்டப்பட்டு வருகிறது.