/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் போனஸ் வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
/
கூடுதல் போனஸ் வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
கூடுதல் போனஸ் வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
கூடுதல் போனஸ் வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2025 01:03 AM

திருப்பூர்; அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கங்கள் சார்பில், குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், துணை தலைவர் ரவி, பொதுசெயலாளர் நடராஜன், பனியன் பேக்டரி லேபர் யூனியன் பொதுசெயலாளர் சேகர், ஜெனரல் சங்க மாவட்ட பொதுசெயலாளர் ரவி, பாத்திர சங்க பொதுசெயலாளர் செல்வராஜ், கட்டட சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மோட்டார் சங்க மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ் மற்றும் மில் தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் சவுந்திரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு, அக். 6ம் தேதிக்கு முன் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.