/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறிக்கு கிராக்கி; விலையில் ஏற்றம்!
/
காய்கறிக்கு கிராக்கி; விலையில் ஏற்றம்!
ADDED : ஜூன் 09, 2025 12:24 AM
திருப்பூர்; பள்ளிகள் திறப்பு, முகூர்த்த தினங்களால், உழவர் சந்தையில் காய்கறி விற்பனை சற்று அதிகரித்துள்ளது. விற்பனை அதிகரிப்பால், கடந்த வாரத்தை விட விலை உயர்ந்துள்ளது.
தெற்கு உழவர் சந்தையில் அதிகபட்சம் பீன்ஸ் கிலோ, 120, அவரை, 90 ரூபாய்க்கு விற்றது; கத்தரி விலை கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விற்பனை சூடு பிடித்துள்ளது; கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு மாதம் கடந்த பின்பும், தக்காளி விலை மாற்றமின்றி, கிலோ, 15 - 18 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
விலை நிலவரம் (கிலோவில்):
வெண்டை, 40, புடலை, 35, கொத்தவரை, 30, பீர்க்கங்காய், 56, சுரைக்காய், 12, பாகற்காய், 50, முள்ளங்கி, 30, வாழைக்காய், 30, சேனை, 50, மரவள்ளி, 30, சீனிக்கிழங்கு, 40, அரசாணிக்காய், 15, சாம்பல் பூசணி, 18, வாழைத்தண்டு (ஒன்று), 10, வாழை பூ, 12, சின்ன வெங்காயம், 55, பெரிய வெங்காயம், 24, உருளைக்கிழங்கு, 44, முட்டைக்கோஸ், 20, கேரட், 50, பீட்ரூட், 60, காலிபிளவர், 40, மேரக்காய், 40, நுால்கோல், 50, இஞ்சி, 56, பூண்டு, 120, முருங்கை, 70 ரூபாய்.