தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜனநாயகன்... ஆரவாரம்

ஜனநாயகன்... ஆரவாரம்

ஜனநாயகன்... ஆரவாரம்


UPDATED : ஜூலை 24, 2026 04:19 AM

ADDED : ஜூலை 23, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2026 04:19 AM ADDED : ஜூலை 23, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. இது அவரது கடைசி திரைப்படம் எனக் கூறப்படுவதால், திருப்பூரில் ரசிகர்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இப்படம், திருப்பூரில் 16 தியேட்டர்களின் 30 திரைகளில் திரையிடப்பட்டது. முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் திரண்டனர். விஜய் பேனர்களுக்கு மாலை அணிவித்தல், பாலாபிஷேகம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல், டி.ஜே. இசையுடன் நடனமாடுதல் என பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் களைகட்டியது. இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள், குடும்பத்தினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சில தியேட்டர்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினர். ஸ்ரீசக்தி தியேட்டர் முன்பு அன்னதானமும் நடைபெற்றது.

படத்தை ரசித்த எம்.எல்.ஏ.க்கள்



திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. பாலமுருகன், குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் பிராட்வே தியேட்டரில் படத்தை பார்த்தார். பின்னர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி, ஸ்ரீசக்தி தியேட்டரில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. சத்யபாமா, சக்தி தியேட்டரில் குடும்பத்தினருடன் படம் பார்த்தார். ரசிகர்களுக்கு குடிநீர், இனிப்பு, ஸ்நாக்ஸ் வழங்கிய அவர், விஜய் பேனருக்கு மாலை அணிவித்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

ஞாயிறு வரை ஹவுஸ்புல்



திருப்பூரில் ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் வரும் 26-ம் தேதி வரை அனைத்து காட்சிகளுக்கும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் பேனருக்காக மரங்கள் மொட்டை:


அனுப்பர்பாளையம்: அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தியேட்டர் முன்பு பெரிய அளவில் பேனர்கள் வைத்துள்ளனர். இந்த பேனர்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறி, தியேட்டர் முன்பு நிழலுக்காக வளர்க்கப்பட்டிருந்த மூன்று மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்களின் கிளைகள் மொட்டையாக வெட்டப்பட்ட சம்பவம், பசுமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us