/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
/
அவிநாசிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும், பணிகளை சரியாக கண்காணிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் பொங்கலுார் அவிநாசி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பாரத மாதா இந்து மக்கள் இயக்க தலைவர் சாய்குமரன், கண்டியன்கோவில் ஊராட்சி தலைவர் கோபால், பாரத மாணவர் பேரவை தலைவர் அண்ணாதுரை, பா.ஜ.க., கிழக்கு மண்டல தலைவர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.