/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2024 12:22 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சிவராமன், பொருளாளர் பெருமாள், துணை தலைவர் ஜெயக்குமர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'அந்தந்த மாவட்டத்துக்கு ஏற்ப கட்டுப்படியாகும் வகையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். போலீஸ், போக்குவரத்து போலீசார் வாயிலாக ஆன்லைனில் அபராதம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது. ஆட்டோ முறைசாரா நலவாரியத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்து, பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் கோஷம் எழுப்பினர்.

