ADDED : பிப் 17, 2024 01:34 AM

மரங்களை வெட்டி காசு பார்க்கும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சாய் குமரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணாதுரை கூறுகையில், ''பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு, பசுமை சூழ்ந்த பள்ளிகள் உருவாக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் சமீபத்தில் தெரிவித்தார். இருக்கின்ற மரங்களை பாதுகாக்காமல், புதிதாக மரக்கன்றுகள் நடுவதால் எந்த பயனும் இல்லை. மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை வெட்டி காசு பார்க்கும் கும்பலை கைது செய்ய வேண்டும்'' என்றார்.
முன்னதாக, மரங்கள் வெட்டி கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள், கைகளில் மரக்கன்றுகள் ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பியபடியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
----
மரங்களை வெட்டி கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பல்லடத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் மரக்கன்றுகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.