/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 15, 2025 11:52 PM

அவிநாசி; விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ற சம்பள உயர்வு வழங்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும்,
மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் சாமியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாறன், ராயன், வடிவேல் உட்பட பலர் பேசினர்.

