/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்கள் சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
கோவில்கள் சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஹிந்து ஆலயங்களையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் வருமானம் முழுவதையும் ஹிந்து ஆலயங்களுக்கும், ஹிந்து மக்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா சார்பில், அனுப்பர்பாளையம்புதுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வல்லவை பாலா, தலைமை வகித்தார்.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில செயலாளர் பிரேம், மாநில அமைப்பு செயலாளர் செந்தில், ஆகியோர் பேசினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

