ADDED : ஆக 14, 2026 10:41 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், ஆக. 15–
கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரசாமி, மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர். பாலு, ஆறுமுகம், சீனிவாசன் உட்பட பலர் பேசினர். வரும், 17ம் தேதி நாடு முழுவதும் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை, திருப்பூர் மாவட்ட அளவில் நடத்துவது, கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட அமைப்பு சார்பில் இந்த ஆர்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
