நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:போயர் சமுதாயத்துக்கு உள் இட ஒதுக்கீடு கோரி, உழைப்பாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள போயர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியம், 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி சந்திப்பில் இந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோவை மாவட்ட தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

