நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காஸ் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி திருப்பூரில் நேற்று இரு கம்யூ., கட்சியினர் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூ., சார்பில் ராயபுரம், குமரப்பபுரத்திலும், மா.கம்யூ., சார்பில் குமரன் சிலை முன்புறமும் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர் மாவட்ட யெலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் வடிவேல், கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் பேசினர்.
இதுதவிர, மேலும் நகரின் சில பகுதிகளில் கிளை வாரியாக இந்திய கம்யூ. மற்றும் மா.கம்யூ., கட்சியினர் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

