/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு இசைப்பள்ளியில் பயில கலை பண்பாட்டுத்துறை அழைப்பு
/
அரசு இசைப்பள்ளியில் பயில கலை பண்பாட்டுத்துறை அழைப்பு
அரசு இசைப்பள்ளியில் பயில கலை பண்பாட்டுத்துறை அழைப்பு
அரசு இசைப்பள்ளியில் பயில கலை பண்பாட்டுத்துறை அழைப்பு
ADDED : ஜூன் 01, 2025 07:18 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கலை பண்பாட்டுத்துறையின் மாவட்ட அரசு இசைப்பள்ளி, உடுமலையில் இயங்கி வருகிறது. குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின், பரதநாட்டியம், மிருதங்கம் ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளில், அரசு சான்றிதழ் படிப்பு அளவுக்கு சான்றிதழ் பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆர்வமுள்ள, 12 முதல், 25 வயது வரையுள்ளவர்கள், ஆண்டுக்கு, 350 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி, இசைப்பள்ளியில் சேரலாம். இலவச பாடப்புத்தகம், மாதாந்திர கல்வி ஊக்கத்தொகையாக, 400 ரூபாய், தங்கும் விடுதி, இலவச பஸ் பாஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.
பயிற்சி நிறைவு பெற்றதும், பல்வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள்; ஹிந்து அறநிலையத்துறை கோவில்கள், திரை இசை அமைப்பாளர், இசை பாடகர், சின்னத்திரை நடனக்கலைஞர், இசைக்கூட இயக்குனர், ஒலி - ஒளி பதிவக அமைப்பாளராக ஆல்பம் வெளியிடுவது, அரசு மற்றும் தனியார் விழாக்களில் பங்கேற்பது, வெளிநாடுகளில் முழு நேர இசை கலைஞராகவும், நிரந்தர வருமானம் ஈட்டும் வகையில், சுய தொழில் கலைஞராகவும் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெறலாம் என, இசைப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.
ஏழாம் வகுப்பு படித்த மாணவர்கள், மூன்றாண்டுகள் படித்து, 10ம் வகுப்புக்கு இணையான இசை படிப்பு சான்றிதழ் பெறலாம். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், மூன்றாண்டுகள் படித்து, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். ஐ.டி.ஐ., - பி.ஏ., - எம்.ஏ., - பி.இ.,- எம்.இ., படித்தவர்களும் இசைப்பள்ளியில் சேரலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, 95664 73769 , 99941 34886, 99422 67837 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.