/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விபத்தில் துணை கமிஷனர் காயம்
/
சாலை விபத்தில் துணை கமிஷனர் காயம்
ADDED : நவ 22, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கார் மீது போலீஸ் வாகனம் உரசி ஏற்பட்ட சிறு விபத்தில் போலீஸ் துணை கமிஷனர் லேசான காயமடைந்தார்.
திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன். நேற்று காலை அவர் தனது அலுவலக வாகனத்தில் பி.என். ரோடு பகுதியில் ரோந்து சென்றார். காலை, 11:00 மணியளவில் அவர் பயணித்த கார் நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் அந்த வாகனம் மீது லேசாக உரசியது.
போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விபத்து ஏற்படாமல் தவிர்க்க சட்டென பிரேக் பிடித்தார். இதில் துணை கமிஷனர் தீபா சத்யன் சற்று நிலை தடுமாறினார். லேசான காயத்துடன் அவர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

