/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தரமான மூலப்பொருட்கள் கொண்டு பலகாரங்கள் தயாரிக்க வேண்டும்'
/
'தரமான மூலப்பொருட்கள் கொண்டு பலகாரங்கள் தயாரிக்க வேண்டும்'
'தரமான மூலப்பொருட்கள் கொண்டு பலகாரங்கள் தயாரிக்க வேண்டும்'
'தரமான மூலப்பொருட்கள் கொண்டு பலகாரங்கள் தயாரிக்க வேண்டும்'
ADDED : அக் 12, 2025 11:34 PM
திருப்பூர்;மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. பண்டிகை கால பதார்த்தங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ், உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றிருக்கவேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப்பொருளின் பெயர், தயாரிப்பு மற்றும் பேக்கிங், காலாவதி தேதி விவரங்களை கட்டாயம் பொறிக்க வேண்டும்.
பலகாரங்கள் தயாரிப்பு தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரித்து, மக்களுக்கு வழங்கவேண்டும்.
உணவு தயாரிப்பாளர் அனைவரும், உணவு பாதுகாப்புத்துறையின் முறையான பயிற்சிகளை பெற்றிருக்கவேண்டும். பொதுமக்கள், உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே, பலகாரம் உள்ளிட்ட பதார்த்தங்களை வாங்கவேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இருந்தால் மட்டுமே வாங்கவேண்டும்.
உணவுப்பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடுகளை, உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்கிற எண்ணிலோ அல்லது, மாவட்ட நியமன அலுவலகத்தின், 0421 - 2971190 என்கிற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். foodsafety.tn.gov.in இணையதளம் மற்றும் TN Food Safety Consumer என்கிற மொபைல் போன் செயலி வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.