ADDED : அக் 30, 2026 11:59 PM

அவிநாசி: அவிநாசி அருகே தேவராயம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு நினைவு நுழைவாயில் திறப்பு விழா, விளையாட்டு விழா, பள்ளி நுாற்றாண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, நுாறாண்டுகளைக் கடந்து இன்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு கல்விச் சேவையாற்றி வருகிறது. இதையொட்டி நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுந்தர்ராஜ், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தி சென்னை சில்க்ஸ் குழுமம் பரஞ்ஜோதி, ஆறுமுகம் அறிவுச்சுடர் அறக்கட்டளை முத்துக்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். நுாற்றாண்டு நினைவு நுழைவாயிலை நம்பியாம்பாளையம் ருக்மணி ஈஸ்வரமூர்த்தி அமைத்துக் கொடுத்தார். திருமுருகன்பூண்டி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவராயன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு நினைவு நுழைவாயில் திறக்கப்பட்டது.
