வாசிப்பு பழக்கத்தை வளருங்கள் விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
வாசிப்பு பழக்கத்தை வளருங்கள் விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
UPDATED : அக் 29, 2026 10:35 PM
ADDED : அக் 29, 2026 10:33 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ஜெய்வாபாய் பள்ளியில் ‘பாதுகாப்பான குழந்தைப் பருவம்’ என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் சசிகலா, ஆசிரியர்கள் பூர்ணிமா, தங்கமணி, வழக்கறிஞர் தமயந்தி முன்னிலை வகித்தனர்.
முகாமில் குழந்தைகளுக்கான சட்டப் பாதுகாப்பு, அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள், குடிமக்களின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. நுாலகம் மற்றும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், போதைப் பொருட்களைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
