/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரில் இருக்கு மேம்பாடு; செயலில் இல்லை! சுகாதார நிலையத்துக்கு வசதிகள் தேவை
/
பேரில் இருக்கு மேம்பாடு; செயலில் இல்லை! சுகாதார நிலையத்துக்கு வசதிகள் தேவை
பேரில் இருக்கு மேம்பாடு; செயலில் இல்லை! சுகாதார நிலையத்துக்கு வசதிகள் தேவை
பேரில் இருக்கு மேம்பாடு; செயலில் இல்லை! சுகாதார நிலையத்துக்கு வசதிகள் தேவை
ADDED : பிப் 02, 2024 11:01 PM

மடத்துக்குளம்:கொமரலிங்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான டாக்டர்கள் நியமித்து, பரிதாப நிலையிலுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை மாற்றவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையிலுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சுகாதார நிலையத்தை தங்கள் மருத்துவ தேவைக்காக நம்பியுள்ளனர்.
சுகாதார நிலையத்தின் முக்கியத்துவம் கருதி ஊரகப்பகுதியில், 30 படுக்கை வசதிகள் கொண்ட, ஆரம்ப சுகாதார நிலையமாக கொமரலிங்கம் மேம்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சுகாதார நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
போதியளவு டாக்டர் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த தேவையான பணியாளர்கள் இல்லை. இதனால், அவசர மருத்துவ தேவைக்கு கூட, உடுமலைக்கு பயணிக்க வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
அங்கிருந்து, 25 கி.மீ., துாரம் தள்ளி அமைந்துள்ள உடுமலைக்கு வர மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த சுகாதார நிலையத்துக்கென, தனியாக ஆம்புலன்ஸ் வாகனமும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வாகனத்தின் வாயிலாக, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வந்தது. முறையான பராமரிப்பு இல்லாமல், தற்போது ஆம்புலன்சுக்கே சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கூட, வேறு ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைக்கின்றனர். இத்தகைய பிரச்னைகளால், கொமரலிங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த, 15க்கும் அதிகமான கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, போதிய டாக்டர்களை நியமிக்கவும், புதிய ஆம்புலன்ஸ் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
முதற்கட்டமாக, 24 மணி நேரமும் சிகிச்சை கிடைக்கும் வகையில், டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

