ADDED : அக் 26, 2026 07:51 PM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.,26) நடைபெற்றது. அமைச்சர் கமலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் பாலமுருகன், சத்தியபாமா, நடராஜ், ஜெயராமகிருஷ்ணன், ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொகுதி வாரியாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய புதிய பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது பேசிய எம்.எல்.ஏ., சத்தியபாமா, திருப்பூர் மாவட்ட நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக கோவைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், உள்ளூரிலேயே உயர்தர சிகிச்சை பெறும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் கமலி தலைமையில் இன்று நடைபெற்றது.
