தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'டபுள் இன்ஜின்' அரசு இருந்தால் வளர்ச்சி பணிகள் சாத்தியம்! பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

 'டபுள் இன்ஜின்' அரசு இருந்தால் வளர்ச்சி பணிகள் சாத்தியம்! பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

 'டபுள் இன்ஜின்' அரசு இருந்தால் வளர்ச்சி பணிகள் சாத்தியம்! பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி


ADDED : ஏப் 21, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல, 'டபுள் இன்ஜின்' அரசை மக்கள் எதிர்பார்ப்பதாக பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் டூவீலரில் ஊர்வலமாக சென்று பிரசாரத்தை நிறைவு செய்தார். ஊர்வலம், பெரிச்சிபாளையம், முத்தையன் கோவில், தட்டான் தோட்டம், திரு.வி.க., நகர், தென்னம்பாளையம், ஏ.பி.டி. ரோடு, சூசையாபுரம் வழியாக ராயபுரம் ரவுண்டானாவில் நிறைவு பெற்றது. அப்பகுதியில், தெற்கு தொகுதி வேட்பாளர் தங்கராஜ், தனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டு, பிரசாரம் செய்தார்.

முன்னதாக, திரைப்பட இயக்குனர் மோகன்ஜி, டூவீலர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பிரசார நிறைவில், புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் செல்வம், நடிகர் ரஞ்சித் ஆகியோர் தாமரை சின்னத்துக்கு ஓட்டளிக்க பிரசாரம் செய்தனர்.

தனது பிரசாரம் குறித்து, வேட்பாளர் தங்கராஜ் அளித்த பேட்டி:

குறுகிய காலமே பிரசாரத்துக்கு இருந்த போதும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களும், நாட்டு நலனில் அக்கறை கொண்ட கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பார்க்க முடிந்தது. தற்போது, உலக நாடுகளில் இருந்து வரும் அசாதாரணமான சூழ்நிலைகளை பிரதமர் மோடி கையாண்ட விதம், குறிப்பாக, காஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம், நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு சிந்துார் ஆப்பரேஷன் வாயிலாக பதில் தாக்குதல் நடத்தியது நாட்டு மக்களிடம் குறிப்பாக, பெண்களிடம், மோடியின் தலைமை மீது மிகுந்த நம்பிக்கையை காட்டியது. தேசிய ஜனநாயக கூட்டணியின், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பெண்களுக்கு மாதம், 2 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, இருபாலருக்கும் இலவச பஸ் பயணம் போன்ற வாக்குறுதிகளை மக்கள் வரவேற்றுள்ளனர்.

கடந்த, ஒரு வார காலமாக பிரசாரத்தில், கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாமல், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பெரிய அளவில் பிரசாரத்தை முன் நின்று நடத்தியதி கூடுதல் பலமாக இருந்தது. ஒவ்வொரு பகுதியில் ஓட்டு சேகரிப்பின் போது, மக்களிடம் மாற்றத்துக்கான வேண்டுதல் தெரிந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளோம்.

முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரசாரம் சிறப்பாக அமைந்தது. ஆளுங்கட்சியில் போட்டியிடும் தினேஷ்குமார், மேயராக இருந்தபோது, நடந்த குப்பை பிரச்னையை மக்கள் மறக்கவில்லை. தமிழக அளவில் ஸ்டாலின்அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயராகி விட்டனர்.

நமது திருப்பூர் நகரத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு அமைந்த உடன் செய்து கொடுப்பேன். குறுகிய கால பிரசாரத்தில், மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படும், 'டபுஸ் இன்ஜின்' அரசை மக்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. வளர்ச்சி பாதையை விரும்பும் அனைவரும், தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேட்டியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us