ADDED : ஜன 08, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். கூட்டுறவு, ஊரக வளர்ச்சித்துறை, நீர் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்து, அமைச்சர் சாமிநாதன் ஆய்வு நடத்தினார். வருவாய்த்துறை சார்பில், பல்லடம் தாலுகா, பூமலுாரை சேர்ந்த பயனாளிகள் ஏழுபேருக்கு, 3.63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

