/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சிப் பணிகள் பூமி பூஜையுடன் துவக்கம்
/
வளர்ச்சிப் பணிகள் பூமி பூஜையுடன் துவக்கம்
ADDED : ஜன 29, 2026 05:08 AM

அவிநாசி: அவிநாசி மேற்கு ஒன்றிய கிராமங்களில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
அவ்வகையில், நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆலங்காட்டுபாளையத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ராமநாதபுரத்தில், தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகியன அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி கவுதம், ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் துரைப்பாண்டி, ஹரிஹரன், சிவகுமார், சுந்தரம், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

