/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
/
பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 16, 2025 11:48 PM
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சிறப்பாக, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் அலகு குத்தி வந்து, பறவைக்காவடி எடுத்து, வேண்டுதல் நிறைவேற்றி அம்மனுக்கு நன்றி செலுத்தி வரும் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
வேண்டுதல் நிறைவேற்றியஅம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கிரேன்களில், பறவைக்காவடி, நீதி காவடி, மயில்காவடி, கன்னிமார் காவடி, குதிரை காவடி என, பக்தர்கள் வாய், நாக்கில் வேல் குத்தியும், உடம்பில் கொக்கி கொண்டு அலகு குத்தியும், தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும், நவதானியங்களைக்கொண்டு முளைப்பாலிகை அமைத்து, மகா மாரியம்மன், தேரடி கருப்பணசாமி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, சமயபுரம் மாரியம்மன், திரவுபதியம்மன் என பல்வேறு உருவங்களில், முளைப்பாலிகை அமைத்தும், 300க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து, முளைப்பாலிகை எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.