/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழநிக்கு பாதயாத்திரையை துவக்கிய பக்தர்கள்
/
பழநிக்கு பாதயாத்திரையை துவக்கிய பக்தர்கள்
ADDED : ஜன 31, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; சோமவாரப்பட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் குழுவினரின், 33ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று கோவிலில், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், ஸ்ரீ பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. கோவில் சார்பில், ஆண்டுதோறும், பழநிக்கு பாதயாத்திரையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். நேற்று, 33ம் ஆண்டு பாதயாத்திரை, கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. பின்னர் காவடி ஆட்டத்துடன் பாதயாத்திரையை பக்தர்கள் துவக்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.