/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் சுமந்த பக்தர்கள்
/
ஸ்ரீ ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் சுமந்த பக்தர்கள்
ஸ்ரீ ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் சுமந்த பக்தர்கள்
ஸ்ரீ ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் சுமந்த பக்தர்கள்
ADDED : ஜூன் 02, 2025 06:19 AM

பெருமாநல்லுார் : பெருமாநல்லுார், அய்யம்பாளையம் பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ராஜவராஹி அம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். ஸ்ரீ ராஜவராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை 9:15 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், சங்கு ஆவாஹணம், வேத பாராயணம், மூலவர் சிறப்பு அபிஷேகம், அலங்கார மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.