/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்
/
அவிநாசி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்
ADDED : நவ 01, 2024 12:50 AM

அவிநாசி : தீபாவளியையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக பல ஊர்களில் இருந்து பக்தர்கள் காலை முதலே வரத் தொடங்கினர்.
கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் கோவில் வரை நீண்ட பக்தர்களின் வரிசை, பிறகு வளைந்து மீண்டும் சபா மண்டபம் வரை நீடித்தது.
நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது.
பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கால் கடுக்க வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கோவில் நிர்வாக தரப்பிலோ வாகன நிறுத்த ஏலம் எடுத்த தரப்பிலோ வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த கண்காணிப்பில் ஈடுபடவில்லை.
கார்களில் வந்தவர்கள் அவரவர் சவுகரியம் போல கார்களை நிறுத்தியிருந்தனர்.
வெளியில் இருந்து வரும் வாகனங்களும், தரிசனம் முடித்து கோவிலில் இருந்து வெளியேறும் பக்தர்களின் வாகனங்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. காத்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.
பக்தர்கள் கூறுகையில், 'விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.
அதை மனதில் கொண்டு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதியை செய்து தர வேண்டும்.
குடிநீர் வசதி கூடுதலாக்க வேண்டும்; நிழல் ஏற்படுத்தும் வகையில் வசதி தேவை. கோவில் வெளிவளாகத்தில் வாகனங்களை நிறுத்தாமல் கோவிலுக்கு சொந்தமான அருகில் உள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.