ADDED : மார் 09, 2024 08:09 AM

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் எம் பெருமானை வழிபட்டனர்.
கோவிலில், நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. அதன்பின், ஐந்து கால பூஜைகள், யாகசாலையில் பிரதிமாலிங்கம் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றது. முன்னதாக, 16 வகை திரவியங்களில் அபிேஷகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில் தர்ப்பண மண்டபத்தில் சிவனடியார்கள் சிவபூஜை மேற்கொண்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாக தரப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிேஷக அன்னதான குழு சார்பில், நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மூலிகை பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.
