/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு; கோவில்களில் திரண்ட பக்தர்கள்
/
ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு; கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு; கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு; கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜூலை 18, 2025 11:41 PM

திருப்பூர்; ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு களைகட்டியது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு, அதிகாலையில் அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு, சவுரி அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். விசாலாட்சியம்மன் உற்சவருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, பொன்னுாஞ்சல் உற்சவம் நடந்தது. சிவாச்சாரியார், ஓதுவார் மூர்த்திகள், திருவாசக பொன்னுாஞ்சல் பதிகம் பாடி, அம்மன் வீற்றிருந்த பொன் ஊஞ்சலைஆட்டினர்; பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில், பல்லடம் பொங்காளியம்மன் கோவில் உட்பட, அனைத்து அம்மன் கோவில்களிலும், அதிகாலையில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.
கோவில் வளாகத்தில், வேப்பிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது; அம்மனுக்கு, வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை அலங்காரர பூஜை நடந்தது. அம்மனுக்கு, ராகிக்கூழ் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு, மஞ்சள் சரடு, மஞ்சள் - குங்குமம், வளையல் மற்றும் பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்த பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன்