/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்
/
சேவூர் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்
சேவூர் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்
சேவூர் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்
ADDED : டிச 01, 2025 05:54 AM

அவிநாசி: 'கோவிந்தா...', 'வெங்கடேசா...', 'நாராயணா' என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணதிர, சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் நேற்று மஹா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. கி.பி. 12-ம் நுாற்றுாண்டு முன்பு, கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
'அழகு ராய விண்ணகரம்' என்று போற்றப்படும் பெருமைக்குரியது. கோவில் திருப்பணிகள் முடிந்தன. நேற்று மஹா கும்பாபிேஷகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக நாடி சந்தனம், புண்யாவாசனம், மஹா பூர்ணாகுதி ஆகியன நடந்தன. யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவையுடன் நேற்று காலை 7:49 மணிக்கு விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து 8:09 மணிக்கு மூல ஸ்தானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பணி குழுவினர் மற்றும் சேவூர் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீதேவிபூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

