/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் கும்பாபிேஷக விழா; பக்திப்பரவசத்தில் பக்தர்கள்
/
கோவில் கும்பாபிேஷக விழா; பக்திப்பரவசத்தில் பக்தர்கள்
கோவில் கும்பாபிேஷக விழா; பக்திப்பரவசத்தில் பக்தர்கள்
கோவில் கும்பாபிேஷக விழா; பக்திப்பரவசத்தில் பக்தர்கள்
ADDED : ஜூன் 17, 2025 12:18 AM

திருப்பூர்; திருப்பூர், மங்கலம் ரோடு, ஸ்ரீ சக்தி ஐஸ்வர்யா கார்டன், வலம்புரி ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது.
கோவிலில் திருப்பணி மேற்கொண்டு, கும்பாபிேஷக விழா கடந்த 8ம் தேதி முளைப்பாலிகையிட்டு துவங்கியது. நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜை நடத்தி, கணபதி ேஹாமம், லட்சுமி மற்றும் நவக்கிரக ேஹாமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து கோபுர கலச ஸ்தாபனம், முதல் கால யாக பூஜை ஆகியன நடந்தன.
நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடும், கோபுர விமானங்கள் மற்றும் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.அரசு வேம்பு திருக்கல்யாணம், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஸ்ரீ சக்தி ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அய்யனார்பெரியசாமி கோவில்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் நொய்யல் கரையில் உள்ள ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவிலின் கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜைகளும் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடும், முதல் கட்டமாக, விநாயகர், முருகன், பேச்சியம்மன், கருப்பராயன், சப்த கன்னிமார் கோவில்கள் கும்பாபி ேஷகம் நடந்தது.
நான்காம் கால யாக பூைஜகளைத் தொடர்ந்து அய்யனார் பெரியசுவாமி கோவில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.