/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெப்பக்குளத்தில் கழிவுநீர் தேங்கிய கொடுமை பெருமாநல்லுாரில் பக்தர்கள் வேதனை

ADDED : ஜன 05, 2025 02:24 AM

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுாரில் பிரசித்திபெற்ற உத்தம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் நான்கு ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது.
குளத்தை முன்பு பயன்படுத்தி வந்துள்ளனர். குளம் நிரம்பும் போது, அதன் தண்ணீர் கணக்கம்பாளையம் ஊராட்சி, பொய்யேறி குட்டை வழியாக அடுத்தடுத்து சென்றுள்ளது. குட்டையால் நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது.
தெப்ப குளம் போதிய பராமரிப்பு இல்லாததால், காலப்போக்கில் குளம் முழுவதும் முட்புதர்கள் மண்டி தற்போது, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குளத்தில், பெருமாநல்லுார், ஈட்டி வீரம் பாளையம் பகுதி மற்றும் குளத்தை சுற்றியுள்ள நிறுவனம், வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் தேங்கி வருகிறது. இதனால் குளத்தை சுற்றியுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்று நீர் மாசுபட்டு உள்ளது. மேலும் தெப்பக்குளம் மற்றும் குளத்திற்கு வரும் நீர் வழியும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.
குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் முட்புதர்களை அகற்ற வேண்டும். துார்வாரி அத்திக்கடவு -- அவிநாசி திட்ட தண்ணீரை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.