/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தை மாத அனுஷ பூஜை பக்தர்கள் பங்கேற்பு
/
தை மாத அனுஷ பூஜை பக்தர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 12, 2026 05:23 AM

உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே -அவுட் செல்வவிநாயகர் கோவிலில், அனுஷ பூஜை நடந்தது.
தை மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி, காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
ஸங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை சித்திர பட ஆவாஹனம், குருத்யானம், பூர்ண கும்ப மரியாதை, காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
மேலும் வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது.
குரு கீதம், நாம சங்கீர்த்தனம், மற்றும் எல்லா உபசாரங்களின் முடிவில் தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அனுஷ பூஜை ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

