/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி
/
அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி
ADDED : ஜன 02, 2025 06:17 AM

அவிநாசி; ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவர் என்பது தெரிந்தும், போதுமான வசதிகளை செய்யவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பக, பொது தரிசனத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள், நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், குழந்தைகள் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பக்தர்களின் வரிசைகளை ஒழுங்குபடுத்த கோவில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.