sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை; பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வலியுறுத்தல்

/

 பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை; பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வலியுறுத்தல்

 பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை; பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வலியுறுத்தல்

 பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை; பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வலியுறுத்தல்


ADDED : ஜன 19, 2026 06:40 AM

Google News

ADDED : ஜன 19, 2026 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பழநி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழநி முருகன் கோவில், வரும், பிப்., 1ம் தேதி, தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக, கேரளா மாநிலம் மற்றும் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.

பொள்ளாச்சி வழியாக வரும் பக்தர்கள் உடுமலை, மடத்துக்குளம் வழியாகவும், ஆனைமலை ரோட்டில், தளி, குறிச்சிக்கோட்டை, குமரலிங்கம் வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். வெயில் காரணமாக பெரும்பாலும் பகல் நேரங்களை தவிர்த்து, இரவு மற்றும் மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் நடந்து செல்கின்றனர்.

குறுகிய ரோடு மற்றும் விபத்துக்கள் அதிகம் நடக்கும் ரோடாக உள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் நடந்து சென்ற பக்தர்கள் மீது, சரக்கு வேன் மோதி ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

இதே போல், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்' ஒட்டுதல், கண்காணிப்பு பணி, ஓய்வு எடுக்கும் வசதிகள் செய்து தருவதோடு, பொள்ளாச்சி, பழநி ரோட்டில் செல்லும் வாகனங்களின் டிரைவர்களுக்கு உரிய அறிவிப்புகள் வழங்குதல், குறுகிய ரோடுகள் பகுதியில் பாதுகாப்பு, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கண்காணிப்பு பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us