ADDED : பிப் 10, 2026 06:12 AM
திருப்பூர்: தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், இன்று (10ம் தேதி) முதல் வரும், 17ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகிப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்.
மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:
குடற்புழு தொற்றிலிருந்து விடுபட 'அல்பெண்டசோல்' மாத்திரைகளை உட்கொள்வது அவசியம்.
ஒன்று முதல் 19 வயது வரை உள்ள, ஏழு லட்சத்து, 51 ஆயிரத்து, 658 குழந்தைகள், 20 முதல் 30 வயதுடைய, இரண்டு லட்சத்து, 48 ஆயிரத்து, 79 பெண்களுக்கு (கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 'அல்பெண்டசோல்' அரை மாத்திரையும், 2 - 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20 - 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 'அல்பெண்டசோல்' ஒரு மாத்திரை வழங்கப்படும்.
காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் உட்கொள்ளலாம். இந்த மாத்திரையை பெண்கள், குழந்தைகள் வாங்கி, பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
