ADDED : செப் 19, 2026 05:09 AM
தாராபுரம்:தாராபுரம்,
குண்டடம் ஒன்றியங்களில் உள்ள, 39 குடியிருப்பு பகுதிகளுக்கான
கூட்டுக் குடிநீர் திட்டம், 1989ல் துவக்கப்பட்டது. அப்போது
அமைக்கப்பட்ட குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்துள்ளன.
இதனால் குடிநீர்
வீணாவதோடு பல இடங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
பழுதடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்க கடந்த காலத்தில்,
அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில்
புதியதாக குழாய் அமைக்க நிதி ஒதுக்கி டெண்டரும் விடப்பட்டது. ஆனால்
பைப்லைன் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி மறுப்பதாக
தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த தொப்பம்பட்டி, நஞ்சியம்
பாளையம்,
கெத்தல்ரேவ் பஞ்., பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், தாராபுரம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, ஒரு வாரத்தில் பைப் லைன் அமைக்க ஏற்பாடு
செய்வதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
