/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாராபுரம் பஸ்களில் தொங்கல் பயணம்
/
தாராபுரம் பஸ்களில் தொங்கல் பயணம்
ADDED : செப் 22, 2025 10:52 PM
உடுமலை; பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், போதிய பஸ்கள் இல்லாததால், அவ்வழித்தட கிராம மக்கள், மாணவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியிலிருந்து, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
தாராபுரத்துக்கும், பொள்ளாச்சிக்கும், அதிகளவு மாணவர்கள், இவ்வழித்தடத்தில் பயணிக்கின்றனர். ஆனால், போதியளவு பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், 45 நிமிடத்துக்கும் அதிகமான இடைவெளியிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், பஸ்களில், தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இரவு நேரங்களிலும், இவ்வழித்தடத்தில், இயக்கப்பட்டு வந்த சில பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, பொள்ளாச்சி, உடுமலை போக்குவரத்து கிளை கழக அதிகாரிகள், ஆய்வு செய்து, கூடுதல் பஸ்கள் இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.