/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
60 சதவீதத்தை தாண்டாத வேட்டி - சேலை வினியோகம்
/
60 சதவீதத்தை தாண்டாத வேட்டி - சேலை வினியோகம்
ADDED : ஜன 21, 2025 11:57 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 7 லட்சத்து 99 ஆயிரத்து 173 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகளாக உள்ளனர். இவர்களில், நேற்று வரை, 6 லட்சத்து 70 ஆயிரத்து 737 பேர் மட்டுமே பரிசு தொகுப்பு பெற்றுள்ளனர். இன்னும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 436 பேர் பரிசு தொகுப்பு பெறவில்லை.
காய்ந்து போன கரும்பு
பரிசு தொகுப்பு வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளநிலையில், வெட்டப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், இருப்பில் உள்ள கரும்புகள் காய்ந்துபோய்விட்டன.
பெரும்பாலான ரேஷன் கடைகளில் தற்போது பரிசு தொகுப்பு பெறுவோருக்கு, காய்ந்த நிலையில் உள்ள கரும்புகளே வழங்கப்படுகின்றன. இதை விரும்பாத பலரும், கரும்பே வேண்டாம் என, பச்சரிசி, சர்க்கரை மட்டும் வாங்கி செல்கின்றனர்.
வினியோகம் குளறுபடி
மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்காக, 7 லட்சத்து 85 ஆயிரத்து 741 கார்டுகள் இலவச வேட்டி சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 6,49,236 சேலை; 6,48,590 வேட்டி மட்டுமே வந்துள்ளது. அதுவும் ரேஷன் கடைகளுக்கு, இரண்டு கட்டமாகவே பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பரிசு தொகுப்பில் ஓரிரு நாட்கள் மட்டுமே வேட்டி - சேலை வழங்கப்பட்டது.
பெரும்பாலானோருக்கு, பரிசு தொகுப்பு மட்டும் வழங்கிவிட்டு, வேட்டி - சேலை வந்தபின் அழைக்கிறோம் என கூறி அனுப்பி விட்டனர்.
ஒதுக்கீட்டில், 60 சதவீதம் மட்டுமே வினியோகிக்கப்பட்டது. 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், விடுபட்டோர் உள்பட அனைவருக்கும் வேட்டி - சேலை வழங்கப்படும் என்கின்றனர், மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள்.