/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உணவுக்கட்டுப்பாடு, சரியான வாழ்க்கை முறை சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் 'ரகசியம்'
/
உணவுக்கட்டுப்பாடு, சரியான வாழ்க்கை முறை சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் 'ரகசியம்'
உணவுக்கட்டுப்பாடு, சரியான வாழ்க்கை முறை சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் 'ரகசியம்'
உணவுக்கட்டுப்பாடு, சரியான வாழ்க்கை முறை சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் 'ரகசியம்'
ADDED : நவ 24, 2025 06:20 AM
திருப்பூர்: ''உணவுக்கட்டுப்பாடு, சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். இதை கட்டுப்படுத்தினால், இது ஒரு நோயே கிடையாது,'' என்று மருத்துவ நிபுணர் கிருஷ்ணன் சாமிநாதன் கூறினார்.
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் இலவச சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை, டாக்டர் ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
மருத்துவ முகாமை கோவை மதுரம் சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு மருத்துவ மையம் நடத்தியது. ஏராளமானோர் பரிசோதனை செய்து, உரிய ஆலோசனையை பெற்று சென்றனர்.
இதில், 'எப்படி வாழ்ந்தால் சர்க்கரை நோய் இல்லாமலும், கட்டுப்பாடு டனும் நலமாக வாழ முடியும்,' என்ற தலைப்பில், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் கிருஷ்ணன் சாமிநாதன் பேசியதாவது:
சர்க்கரை நோய் என்பது அமைதியான கொலையாளி. இது ரத்த குழாய்கள் அடைபடும் நொடி வரை வெளியில் தெரியாது. மாரடைப்பு, வாதம், கண் பாதிப்பு, சிறுநீரகம், கால் எடுத்தல், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒழுங்காக கட்டுப்படுத்த தவறினால் மட்டுமே பாதிப்பு தரும். இதை கட்டுப்படுத்தினால், இது ஒரு நோய் கிடையாது.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் சர்க்கரை செல்லும் போது, ஒவ்வொரு பகுதியில் உறுப்புகளை பாதிப்பை ஏற்படுத்தும். முழுதும் பாதிப்பு ஏற்படும் வரை, வெளியில் நமக்கு காட்டாது.
ஏ.பி.சி. மூன்று அமைதியான கொலையாளிகளான ஏ.பி.சி., நோய்கள். நீங்கள் நன்றாக, நலமாக இருக்க வேண்டும் என்றால், இந்த ஏ.பி.சி. நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏ என்றால், மூன்று மாதம் சர்க்கரை அளவு சராசரி, பி என்றால் பிளட் பிரஷர்(ரத்த அழுத்தம்), சி என்றால், கொலஸ்ட்ரால்.
இன்றைய சூழலில், இந்த ஏ.பி.சி. நோய்களால் தான், 65 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். உணவில், சோற்றின் அளவை குறைக்கப்பட வேண்டும். பிஸ்கட், பேக்கரி, முறுக்கு உள்ளிட்ட ஜங் புட்ஸ்களை தவிர்க்க வேண்டும். நீராகாரத்தில், ஜூஸ், கூழ், கஞ்சி, சத்து மாவு போன்றவை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறையை குடிக்க வேண்டும்.
நீர் மோர், லெமன், நெல்லிகாய் ஜூஸ் (சர்க்கரை இல்லாமல்) எடுக்கலாம். மது, புகைப்பழக்கம் வேண்டாம். பணத்தை கொடுத்து எமனை வீட்டுக்கு அழைக்க வேண்டாம். இன்சுலின் எடுத்து கொள்பவர்கள், ஒரே இடத்தில் செலுத்த கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, உடல் பாகத்தை மாற்றி செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
5 விஷயங்களில் கவனம்: சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஐந்து விஷயங்களை பின்பற்ற வேண்டும். முதலில், வெறும் வயிற்றில், 80 முதல், 130க்குள் இருக்க வேண்டும். உணவு உண்டு, 2 மணி நேரத்துக்கு பின், 200க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் என, மூன்று மாதம் சர்க்கரை அளவு சராசரியாக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை பொறுத்தவரை மேல் அளவு, 140 க்குள், கீழ் அளவு, 90க்குள் இருக்க வேண்டும். கெட்ட கொழுப்பு, 70க்குள் இருக்க வேண்டும்.
இந்த, ஐந்து விஷயங்களை சரியாக கண்காணித்தால், டாக்டர், மருத்துவமனையை நாட வேண்டியதில்லை. இதை கட்டுப்படுத்தினால், இது ஒரு நோய் கிடையாது. இதை கட்டுப்படுத்த, டாக்டரின் பங்கு, 30 சதவீதம் இருக்கும்; 70 சதவீதம் உங்களிடம் தான் உள்ளது.
- கிருஷ்ணன் சாமிநாதன்: நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்.:
டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் கூறியதாவது:
சர்க்கரை நோய் தொடர்பாக மாத்திரை எடுத்தால் சிறுநீரகம் பாதிப்பு போன்ற தவறான கட்டு கதைகளை கேட்டு, முறையாக சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விடுவதன் விளைவு உயிர் பாதிப்பு. நம்மை சார்ந்த குடும்பம் பெரிதும் பாதிக்கப்படும். வாட்ஸ்-அப் உலகத்தில், நோய் தொடர்பான, சிகிச்சை குறித்து ஏதாவது ஒன்றை பகிர்கின்றனர். இதையும் உண்மையென கருதி, மருத்துவ அறிவுரை, மாத்திரைகளை தவிர்ப்பது தவறானது. உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ பிரச்னைகளை அடுத்தவர்களிடம் பகிர வேண்டாம்.
ஏன் என்றால், ஏதாவது ஒரு தவறான விஷயத்தை எடுத்து கூறி, வழிகாட்டி விடுகின்றனர். இதை நம்பி, முறையாக மருத்துவ ஆலோசனைகள், மாத்திரைகளை எடுப்பதில்லை. இன்றைக்கு வாட்ஸ்-அப், கூகுள் டாக்டர்கள் நிறைய பேர் உள்ளனர். கருத்துகளை பகிர்ந்து, தேடியும் சிகிச்சை எடுக்கின்றனர். இதை நம்ப வேண்டாம். பின்பற்ற வேண்டாம்.

