தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காப்பீடு இருந்தும் வாழைக்கு இழப்பீடு பெறுவதில் சிரமம்

காப்பீடு இருந்தும் வாழைக்கு இழப்பீடு பெறுவதில் சிரமம்

காப்பீடு இருந்தும் வாழைக்கு இழப்பீடு பெறுவதில் சிரமம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: காப்பீடு செய்திருந்தும் வாழைப் பயிருக்கு இழப்பீடு பெற முடியாத நிலை உள்ளதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு சராசரியாக ரூ.1.5 லட்சம் செலவு செய்கின்றனர். வெப்பச் சலனம், பருவமழையின்போது வீசும் சிறிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து பெரும் இழப்பு ஏற்படுகிறது.

மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும், ஒரு வாழை மரத்துக்கு ரூ.9 மட்டுமே வழங்க முடியும். சிறிய சூறாவளிக் காற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தனி விதிமுறைகள் இல்லை.

மேலும், பயிர் காப்பீட்டில் குறிப்பிட்ட கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனால், காப்பீடு செய்திருந்தும் பல விவசாயிகளால் இழப்பீடு பெற முடியவில்லை. ஈரோடு மாவட்டம் சிறுவலுார், வெள்ளாங்கோவில் பகுதிகளில் அண்மையில் வீசிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

எனவே, சிறிய சூறாவளிக் காற்றால் வாழை, மக்காச்சோளம், சவுக்கு, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும்போது இழப்பீடு வழங்கும் வகையில் தமிழக அரசு நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us