/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் பொருள் வாங்க கஷ்டம்: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் பொருள் வாங்க கஷ்டம்: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரேஷன் பொருள் வாங்க கஷ்டம்: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரேஷன் பொருள் வாங்க கஷ்டம்: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 11:47 PM

அவிநாசி: அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை கருவிழி மூலம் பொருட்கள் வழங்குவது, ப்ளூடூத் முறையில் பொருட்களை எடை போடுவது நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஒரு ரேஷன் கார்டுக்கு குறைந்தது 15 நிமிடத்திற்கு மேல் ஆவதால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். வேலைக்கு ஒரு நாள் விடுப்பும் எடுத்து வருமானத்தையும் இழக்க வேண்டியதாகிறது. வயதானவர்களுக்கு கைரேகை, கருவிழி பதிவாகாமலும் மென்பொருளில் சிக்கல் ஏற்படுவதால் பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
கைரேகை மற்றும் கருவிழி மூலம் பொருட்கள் வழங்குவதையும், ப்ளூடூத் முறையில் பொருட்கள் எடை போடுவதை மாற்றி மொபைல் போனில் ஓ.டி.பி. மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வடுகபாளையம் ரேஷன் கடை முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அவிநாசி ஒன்றிய செயலாளர் கவுரிமணி தலைமை தாங்கினார். லதா, கோமதி, லட்சுமி, ராமசாமி, சின்னசாமி, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் தேவி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் குமாரசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

