/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்நகரங்களுக்கு செல்ல சிரமம் போதிய பஸ் இல்லாமல் பாதிப்பு
/
தொழில்நகரங்களுக்கு செல்ல சிரமம் போதிய பஸ் இல்லாமல் பாதிப்பு
தொழில்நகரங்களுக்கு செல்ல சிரமம் போதிய பஸ் இல்லாமல் பாதிப்பு
தொழில்நகரங்களுக்கு செல்ல சிரமம் போதிய பஸ் இல்லாமல் பாதிப்பு
ADDED : ஜன 05, 2026 05:34 AM

உடுமலை: அரையாண்டு விடுமுறை முடிந்து, கோவை உள்ளிட்ட தொழில்நகரங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால், உடுமலை பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதிப்பட்டனர்.
அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால், உடுமலை பஸ் ஸ்டாண்டில் வழக்கத்தை விட, கூட்டம் அதிகளவு இருந்தது.
குறிப்பாக, தொழில்நகரங்களான கோவை, திருப்பூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பயணியர் உடுமலை பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திண்டுக்கல், பழநியில் இருந்து பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் இயக்கும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், உடுமலையில் பயணியர் ஏற முடியாமல் பாதித்தனர்.
உடுமலை வழியாக கோவை மற்றும் திருப்பூருக்கு, பஸ் இயக்க, போக்குவரத்து கழக கோவை மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
உடுமலை போக்குவரத்து கழக கிளையில் இருந்து, தொலைதுார பஸ்கள் இயக்க முடியாததால், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், கோவை, உடுமலை, பழநி வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்பதே பயணியர் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடுமலையிலிருந்து, திருப்பூருக்கு இரவு நேர பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

