/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம்! 'டிக்மா' அமைப்பு வேண்டுகோள்
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம்! 'டிக்மா' அமைப்பு வேண்டுகோள்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம்! 'டிக்மா' அமைப்பு வேண்டுகோள்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம்! 'டிக்மா' அமைப்பு வேண்டுகோள்
ADDED : அக் 06, 2025 12:38 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை தலைவர் மணி முன்னிலை வகித்தார். துணை செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.
செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் தேவராஜ் வரவு - செலவு கணக்கை சமர்பித்தார்.
சி.எம்.ஏ.ஐ. நிர்வாகிகள் முகேஷ் ஜெயின், ஆனந்த் கொலெச்சா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், துணை தலைவர் கார்த்திகேயன், துணை செயலாளர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பனியன் உற்பத்தியின் மூல பொருட்களான பருத்தி மற்றும் நூல்களின் விலை ஒரே சமநிலையில் தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் தொழில்துறை வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி உதவ வேண்டும்.
அட்டை பெட்டி மற்றும் பின்னலாடை துணை பொருள்களுக்கு இருந்த, 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைத்தது போல பாலி பேக், டை கெமிக்கல் போன்ற பொருள்களுக்கும் வரியை குறைத்து, 5 சதவீதம் என்ற அளவில் அறிவிக்க வேண்டும்.
திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலங்கள் அமைத்து சாலைகளை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.