/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; ஆர்.வி.ஜி. பள்ளி மாணவர்கள் உடனடி பதில்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; ஆர்.வி.ஜி. பள்ளி மாணவர்கள் உடனடி பதில்
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; ஆர்.வி.ஜி. பள்ளி மாணவர்கள் உடனடி பதில்
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; ஆர்.வி.ஜி. பள்ளி மாணவர்கள் உடனடி பதில்
ADDED : நவ 20, 2024 10:15 PM

உடுமலை ; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.
நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில், 64 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஏ' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி சஹானா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ரோஸ்னா ஆகியோர் வென்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி, தாளாளர் ஜூலியா சந்தோஷ், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் சண்முகப்ரியா, சரண்யா, விந்தியா பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து, எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.
மாணவர்களுக்கான இதழ்
பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி கூறியதாவது: பட்டம் நாளிதழில் வரும் பாடப்பகுதிகள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையாகவும் இருக்கின்றன. புகைப்படங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை துாண்டி அவர்களை கவரும் வகையில் உள்ளது.
இதழில் வரும் புதிர்கள் குழந்தைகளை அதில் ஈடுபட வைக்கின்றன. குழந்தைகளின் சிந்தனையை துாண்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச செய்திகள், குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாக இருக்கிறது. குழந்தைகளின் பொது அறிவு சார்ந்த பார்வையை விரிவுபடுத்துகிறது.
இவ்வாறு கூறினார்.
படிப்பதற்கு எளிமை
மாணவி சஹானா: ஒவ்வொரு முறையும் பட்டம் இதழ் வாசிக்கும்போது, ஆர்வம் அதிகரிக்கிறது. பல அறிய தகவல்களை எளிமையாக அறிந்து கொள்வதற்கான ஒரு இதழாக உள்ளது. பட்டம் வாசிப்பதால், தற்போது நுாலக புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஏற்படுகிறது. அதேபோல் அதில் வரும் தகவல்களை பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதால், அவர்களுக்கும் பட்டம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சிந்தனைகளை துாண்டுகிறது
மாணவி ரோஸ்னா: பட்டம் இதழில் வழங்கப்படும் தகவல்கள், எங்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உள்ளது. அதில் வழங்கப்படும் தகவல்கள் குறித்து, மேலும் அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை துாண்டுகிறது.
இதனால் படிப்பிலும், திறம்பட செயல்பட முடிகிறது. பட்டம் வினாடி - வினா போட்டியில் ஆர்வத்தோடு விளையாடினோம். அடுத்தகட்ட போட்டிகளில் விளையாடுவதற்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். கட்டாயம் வெற்றி பெறுவோம்.