/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் வேலை உறுதி திட்டம் ரத்து
/
ஊராட்சிகளில் வேலை உறுதி திட்டம் ரத்து
ADDED : செப் 23, 2011 10:03 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்துள்ள எட்டு ஊராட்சிகளிலும்,
இன்று முதல் வேலை உறுதி திட்ட பணியை நிறுத்த வேண்டும் என, மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21
ஊராட்சிகளில் செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிய
மண்ணரை, முத்தணம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய
எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய வேலை உறுதி
திட்ட பணிகள் இந்த எட்டு ஊராட்சிகளிலும், நேற்று வரை நடந்தது. மகாத்மா
காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சி பகுதி மக்கள் பயனடைந்து
வந்தனர். எட்டு ஊராட்சிகளிலும் வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்தி வைக்க
வேண்டுமென, நேற்றிரவு உத்தரவு வெளியானது. எட்டு ஊராட்சிகளும்,
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, மாநகர பகுதியாக மாறியுள்ளன. இதனால் வேலை
உறுதி திட்டம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று இரவு
8.00 மணிக்கு, மாநகராட்சியுடன் இணைந்துள்ள எட்டு ஊராட்சிகளிலும், இன்று
(24ம் தேதி) முதல் வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென
உத்தரவிடப்பட்டுள்ளது.