sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தினமலர்' வழிகாட்டி கோலாகலத் துவக்கம்: மாணவ - மாணவியர் குவிந்தனர்

/

'தினமலர்' வழிகாட்டி கோலாகலத் துவக்கம்: மாணவ - மாணவியர் குவிந்தனர்

'தினமலர்' வழிகாட்டி கோலாகலத் துவக்கம்: மாணவ - மாணவியர் குவிந்தனர்

'தினமலர்' வழிகாட்டி கோலாகலத் துவக்கம்: மாணவ - மாணவியர் குவிந்தனர்


ADDED : ஏப் 05, 2025 11:45 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரின் உயர்கல்வி தேடுதல்களுக்கு வழிகாட்டும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கியது. இதில் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் பங்கேற்று, உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விடை பெற்றனர். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்து விட்டு, உயர்கல்வியை தேர்வு செய்ய காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில், உயர்கல்வி வழிகாட்டி, கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி நேற்று துவங்கியது.

கருத்தரங்கு அரங்கை ரேவதி கல்வி குழுமங்களின் டிரஸ்டி ரேவதி ஈஸ்வரமூர்த்தி, கற்பகம் கல்வி குழுமம் மற்றும் பல்கலைக்கழக 'டீன்' அமுதா, எஸ்.என்.ஆர்., கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், ஐ.டி.பி., எஜூகேஷன் நிறுவன தமிழகத் தலைவர் தீபா சீனிவாசன், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா திருப்பூர் கிளை சேர்மன் தருண் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

முன்னதாக, கண்காட்சி அரங்கை, ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன், கோவை 'தினமலர்' உதவி பொது மேலாளர் (விற்பனைப்பிரிவு) அய்யப்பன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

வழிகாட்டி நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

வல்லுனர்களின் கருத்துகள்குறிப்பெடுத்த மாணவர்கள்


வழிகாட்டி நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். பெற்றோர்களும் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் மகன், மகளின் உயர்கல்விக்கான வல்லுனர்களின் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

ஆசிரியரை நீங்களே தேர்வு செய்யலாம்


ஐ.டி.பி., எஜூகேஷன் நிறுவன, தமிழக விற்பனைப்பிரிவு தலைவர் தீபா சீனிவாசன் பேசியதாவது:

படித்த படிப்புக்கு உண்டான வேலை, சம்பளம் என்றால் அது வெளிநாட்டு வேலை தான். ஆனால், ஆங்கில அறிவு கட்டாயம். ஒவ்வொரு நாட்டிலும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான காலம் மாறுபடும். அதற்கேற்ப தங்கும் நாட்கள், விசா நடைமுறைகளுக்கு நாம் தயாராக வேண்டும். அதேபோல், வெளிநாடுகளில் படிக்க, அவர்கள் தேர்வு முறைக்கு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்று, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் படித்தால் படிப்பதற்கான நேரம், ஆசிரியர் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வெளிநாடுகளில் மெக்கானிக்கல் இன்ஜி., இன்சூரன்ஸ் ெஹல்ப்லைன் படிப்பில் பலர் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். உயர்கல்வி படிப்பதில் மிகவும் பாதுகாப்பான நாடுகளாக ஆஸி., நியூசி., நாடுகள் உள்ளது.

உலகில் தலைசிறந்த கல்வியை வழங்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன் முதன்மையாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு சலுகைகள் உண்டு. உங்களை பற்றிய 'டாக்குமெண்ட்டேஷன்', பாஸ்போர்ட், சுய குறிப்பு, மதிப்பெண் விபரங்கள் முக்கியம்.

அதற்கு முன், குடும்பத்தின் பொருளாதார நிலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்புடன் கூடிய வெளிநாட்டு படிப்புகள் நிறைய உள்ளது. அதற்கேற்ற வகையில், செல்ல நீங்கள் தயாரானால் போதும். வெளிநாடு சென்று படிக்க முடிவெடுத்து விட்டால், அதற்கான உதவிகளை, ஐ.டி.பி., எஜூகேஷன் செய்து தருகிறது.

சமைத்தால் மட்டும் போதாது... சுவையான பிரியாணிக்கே மவுசு


எஸ்.என்.ஆர்., கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் பேசியதாவது:

வழக்கமான பட்டபடிப்புகளுக்கு வேலை தேடித்தரும் காலமெல்லாம் இப்போது இல்லை. எந்த படிப்பாக இருந்தாலும், சான்றிதழ்களை தாண்டி உங்களிடம் என்ன தனித்திறன் உள்ளது. 'எக்ஸ்ட்ரா கரிகுலர்' எப்படி என்பதை தான் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்கள் ஆராய்கின்றன.

அதற்கு படிப்பு போக மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நீங்கள் பழக வேண்டும். எதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து, அதற்கான உயர்படிப்பை தேர்வு செய்யுங்கள்.ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள். தினசரி 'அப்டேட்' ஆகுங்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், சிவில் இன்ஜி., துறையில் தொடர்ந்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.

கல்லுாரி படிப்பை தேர்வு செய்யும் முன், நான்கு ஆண்டுகளுக்கு கழித்து படித்து முடித்த பின் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டு, கல்லுாரியை, படிப்பை முடிவு செய்யுங்கள். 2030ம் ஆண்டுக்கு இன்றிலிருந்தே தயாராக வேண்டும். வேலையில் இணைய டிகிரி மட்டும் போதாது.

சமையல் செய்ய கற்றுக்கொண்டால் தான்; பிரியாணி செய்ய முடியும். சமையல் மட்டுமே செய்த தெரிந்தவர்களை விட, சுவையான பிரியாணி செய்பவருக்கு' தான் வேலை கிடைக்கும்.

வெற்றிலை - பாக்கு வைத்து அழைக்க தயாராகுங்கள்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் ஜெகஜீவன் பேசியதாவது:

கலை அறிவியல், பொறியியல், நர்சிங் உட்பட உயர்படிப்புக்கு தேவையான அனைத்து கல்லுாரிகளும் தமிழகத்தில் உள்ளது. இன்ஜி., படிப்புகளுக்கு இணையாக கலைப்பிரிவில் பல பாடப்பிரிவுகள் உள்ளன. என்ன படிப்பு, எந்த கல்லுாரி, இளங்கலை முடித்து, முதுகலை எப்படி தொடர்வது என்பதை படிக்க போகும் மாணவ, மாணவியராகிய நீங்கள் முதலில் தீர்மானியுங்கள். உங்களுக்கு ஆர்வம் எதுவோ அதனை தேர்வு செய்யுங்கள். இது விஷயத்தில், பெற்றோர் தங்கள் எண்ணங்களை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். பெற்றோருக்கும் இது கடினமான சூழல் தான்.

மதிப்பெண் அதீத அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய மதிப்பெண்களுடன் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களையும் ஒரு போதும் ஒப்பிடாதீர். ஒரு டிகிரி வெறும் பி.காம்., தான் என முன்பை போல் கடந்து போய் விட முடியாது. வெறும் பட்டம் மட்டும் வேலை வாங்கித்தராது. படிப்பு முடித்து வெளியே வரும் போது, தனித்திறன்கள் முக்கியம். அவர்களையே நிறுவனங்கள் தேடுகின்றன. கம்ப்யூட்டர், சாப்ட்வேர், ஹார்டுவேர் சார்ந்து படிக்க விரும்பினால், அதற்கேற்ப பி.காம்., உட்பிரிவுகளை அறிந்து கோர்ஸ் தேர்வு செய்யுங்கள். வரும் காலத்தில் ஏ.ஐ., அனைத்து துறைகளிலும் கோலோச்சும்.

எனவே, முதுகலை படிப்புக்கு ஏற்றவாறு இளங்கலை இருக்க வேண்டும். பி.எஸ்.சி., (ஏ.ஐ.,), சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பி.எஸ்.சி., கேட்டரிங், மனிதவள மேம்பாடு சார்ந்த படிப்புகளுக்கு மவுசு கூடி வருகிறது. திறமை இருந்தால் உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பார்கள். படித்தும் வேலைக்கு சேரலாம். படிக்காமல் வேலைக்கு சேரலாம். ஆனால், எந்த வேலை என்பது நீங்கள் தீர்மானிப்பது தான்.

இந்த 'எட்டு' இருந்தால்எப்படியும் சாதிக்கலாம்


 ஆங்கிலம் சரள

மாக பேசுதல்

 எழுதும் திறன்

 தேடுதல்

 தலைமைப்பண்பு

 பிரச்னை தீர்க்க

முன் நிற்பது

 செயல்களில்

தனித்துவ திறமை

 சுய ஒழுக்கம்

 அறிவார்ந்த

தகவல் சேகரிப்பு

உங்களின் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள இந்த எட்டு திறன்கள் மிக முக்கியம். உயர்கல்வி படிப்பு, வேலைவாய்ப்பில் இதனை வளர்த்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து முன்னேறலாம் என்று, டாக்டர் ஜெகஜீவன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

வழிகாட்டி 'ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சி உருவாகும்'

'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் ' எனும் தலைப்பில் ஜெயப்பிரகாஷ்காந்தி பேசியதாவது:

நாம் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை சந்திக்க உள்ளோம். இன்ஜி., படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால், நீங்கள் படித்து முடித்து வெளியே வரும் போது, உங்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தனித்திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.அமெரிக்காவில் ஏ.டி.எம்., கிரெடிட், டெபிட் கார்டு இல்லை. எல்லாம் கைரேகைக்கு வந்து விட்டது, தொடுதல் உணர்வு மூலம் பணபரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் வந்து விட்டது. விரைவில் நம் நாட்டுக்கும் இது வரும். 'ரோபோட்டிக்ஸ்' தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். 'ெஹல்த் கேர் வெர்ச்சுவல் ரியாலிட்டி'யில் மாற்றம் இருக்கும். நம் இதயம் துடிப்பதை நாமே அறியலாம்; மரணம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர வைக்கும் வகையில் 'வெர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில்நுட்பம் வளரும்.

'பொறியியலில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ்','எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி துறை சிறப்பான எதிர்காலத்தை அடையும். நீங்கள் உயர்கல்வி படிப்புக்கு கல்லுாரியை தேர்வு செய்யும் முன், அந்த கல்லுாரி, என்.ஐ.ஆர்.எப்., ரேங்கிங் பெற்றுள்ளதா என ஆராய வேண்டும். தேர்வு செய்யும் கல்லுாரிகளின் சமூகவலைதளம், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பாருங்கள். படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதா, சம்பளம் பெற்று பணியை தொடர்கிறார்களா என்பதை ஆராயுங்கள். அதன் பின் கல்லுாரியை தேர்வில் நல்ல முடிவு எடுங்கள்.

'நீட்' தேர்வில் மதிப்பெண் குறைந்தால், இடம் கிடைக்கவில்லை என்றால், கால்நடை மருத்துவம், மீன் வளர்ப்புத் துறை படிப்பு தேர்வு செய்யலாம். உலக அளவில் ஏ.ஐ., பிரபலமாகி வந்தாலும், இதனையும் தாண்டி,'ஓ.ஐ.,' (ஆர்க்கனைஸ்டு இன்டலிஜென்ஸ்) விரைவில் வரும்.

இவ்வாறு, ஜெயப்பிரகாஷ்காந்தி பேசினார்.

தினமும் நாளிதழ் படியுங்கள்

ஜெயப்பிரகாஷ்காந்தி மேலும் பேசுகையில், ''பல புரட்சிகளுக்கு வித்திடும் ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் விஸ்வரூபமாக வளர்ந்தாலும், 'ஆட்டோமேஷன்' ஆட்கொண்டலும், மனித மூளையின் செயல்திறன் அவசியம். படிக்காமல் யாருக்கும் வேலை கிடைக்காது. உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் தான் தேடிச்செல்ல வேண்டும். யாரையும் தேடி வாய்ப்பு வராது. பள்ளியில் படித்தை விட பத்து மடங்கு கூடுதலாக படித்தால் உயர முடியும். நல்ல கருத்துககளை காது கொடுத்து கேட்கணும். தினமும் நாளிதழ் படியுங்கள். சரியான கேள்விக்கு பதில் சொல்லும் புத்திசாலிகளாக நீங்கள் மாற வேண்டும்,'' என்றார்.



பதில்கள் 'பட்... பட்' மாணவருக்கு பரிசுகள்


'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில், பொது அறிவு குறித்து போட்டி நடந்தது. பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. விரைவாக, மிகச்சரியாக விடை எழுதிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், மாணவி, யாழினி முதலிடம் பெற்று 'லேப்டாப்' வென்றார். இரண்டாமிடம் சிவராம் 'டேப்', சரண்யாஸ்ரீ, பிரவீன், நிதர்ஷனா, சையதுஹீசம், மணிகண்டன் ஆகியோர் ஆறுதல் பரிசாக 'ஸ்மார்ட் வாட்ச்' பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் ஜெகஜீவன் ஆகியோர் பரிசு வழங்கினர்

இன்றும் பரிசும் உண்டு

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், இன்றும் கருத்தரங்கு நடக்கிறது. பொது அறிவு குறித்த போட்டியில் பங்கேற்று, விரைவாக, மிகச்சரியாக விடை எழுதும் மாணவ, மாணவியருக்கு பரிசு உண்டு. எனவே, வெற்றி பெற்று, பரிசை அள்ள மாணவ, மாணவியரே வாருங்கள்.

பெற்றோரும் பங்கேற்கலாம்

மாணவ, மாணவியரின் நலனுக்காக நடத்தப்படும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 95667 77833 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம். உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடை காண இன்று கடைசி வாய்ப்பு. கருத்தரங்கில் பங்கேற்று, உயர்கல்விக்கான கருத்துகளை அள்ளிச் சென்று பயன் அடையுங்கள்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் ஜெகஜீவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us