sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா ஆர்.ஜி., மெட்ரிக் மாணவர்கள் அசத்தல்

/

 'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா ஆர்.ஜி., மெட்ரிக் மாணவர்கள் அசத்தல்

 'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா ஆர்.ஜி., மெட்ரிக் மாணவர்கள் அசத்தல்

 'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா ஆர்.ஜி., மெட்ரிக் மாணவர்கள் அசத்தல்


ADDED : நவ 20, 2025 05:27 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.

இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.

அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஏழாம் வகுப்பு மாணவர்கள் வருண்சாய் மற்றும் ரித்திஷ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, ஒருங்கிணைப்பாளர் கதீஜா, ஆசிரியர் ஆதிரை ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

நீங்கா இடம் பிடித்தது பள்ளி முதல்வர் சகுந்தலாமணி கூறுகையில், ''வானில் பறக்கும் பறவையைப் போல மன எண்ணங்களை, கற்பனைகளாக வடித்து சிறகடித்து பறக்கும் பட்டம் போல, மாணவர் நெஞ்சங்களில், நீங்கா இடத்தை பிடித்த வானவில்லை போன்றதோர் வண்ணமயமானது, 'பட்டம்' இதழ். வண்ணமயமான எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தரும் மாயத்துாரிகையே நம் மழலையரை மயக்கும் 'தினமலரின்' மாணவர்களுக்கான 'பட்டம்' இதழ்,'' என்றார்.

திறனை வளர்க்கிறது

மாணவன் வருண்சாய்: மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த 'தினமலர்' பட்டம் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. அறிவியல், நடப்பு நிகழ்வுகள் தமிழ் பண்பாடு உள்ளிட்ட பல துறை சார்ந்த தகவல்கள் இதில் இடம் பெறும். பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தன்மை மற்றும் விரைவான சிந்தனை திறனை வளர்க்கும் ஒரு சிறந்த மேடை 'தினமலர்' 'பட்டம்' நாளிதழ் மாணவன் ரித்திஸ்: 'பட்டம்' இதழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனும் என்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க உதவியாக உள்ளது. புதிய அறிவியல் கருத்துகள் அனைத்தும் இடம் பெறுவது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 'பட்டம்' இதழை படிக்கும் போது, மற்ற பாடங்கள் எல்லாம் சுலபமாக இருக்கிறது. அயல்நாட்டு செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது என்பதால், மிகவும் பயனுள்ளதாக உள்ளது.








      Dinamalar
      Follow us