ADDED : ஆக 23, 2011 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வேதியியல் துறை
சார்பில், அனைத்து கல்லூரிகளுக்கிடையேயான 'கெம் -பார்ம்-2011' என்ற
தலைப்பில், போட்டிகள் நடந்தது.
கல்லூரி முதல்வர் மஞ்சுளா தலைமை வகித்தார்.
பேராசிரியர் மலர்விழி வரவேற்றார். 15 கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
கல்லூரி முதல்வர் மற்றும் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி பரிசுகளை
வழங்கினர். வேதியியல் துறையின் பேராசிரியர் சித்ராதேவி நன்றி கூறினார்.