/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்து ஏற்படுத்தும் குடிநீர் தொட்டியை இடிக்க கோரிக்கை
/
ஆபத்து ஏற்படுத்தும் குடிநீர் தொட்டியை இடிக்க கோரிக்கை
ஆபத்து ஏற்படுத்தும் குடிநீர் தொட்டியை இடிக்க கோரிக்கை
ஆபத்து ஏற்படுத்தும் குடிநீர் தொட்டியை இடிக்க கோரிக்கை
ADDED : ஆக 23, 2011 11:22 PM
மடத்துக்குளம் : கணியூர் பஸ் ஸ்டாண்டில் ஆபத்து ஏற்படுத்தும் வகையிலுள்ள
மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் பேரூராட்சி பஸ்
ஸ்டாண்டில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்தொட்டி
உள்ளது. கருங்கற்களை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது. மேல்பகுதியில் குடிநீர் தேக்க
தொட்டியாகவும், கீழ்பகுதி காலி அறையாகவும் அமைக்கப்பட்டது. இதன் மூலம்
கணியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொட்டிக்கு
கீழ்பகுதியில் உள்ள காலிஅறையில் பல ஆண்டுகள் பேரூராட்சி சம்பந்தப்பட்ட
அலுவலகம் இருந்தது. அதன் பின் கடைகள் வைக்க வாடகைக்கு விடப்பட்டது. 40
ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விரிசல் காணப்பட்டது. இதனால் இதை
பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டு வேறு இடத்தில் புதிய மேல்நிலைத்தொட்டி
கட்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது:
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. பள்ளி
செல்லும் மாணவர்கள் இந்த தொட்டியை கடந்து சென்று வருகின்றனர். இது குறித்து
பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு தொட்டியை இடித்து
அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.